மந்திரக் கணங்கள் நுால் அறிமுகம்
புதுடில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில், 40 மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வரவேற்புடன், பெ.ராஜேந்திரனின், மந்திரக் கணங்கள் நுால் அறிமுக விழா, நடந்தது.திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், தில்லித் தமிழ்ச் சங்க பொதுச் செயலர் முகுந்தன் வரவேற்புரை ஆற்றினார். சங்க தலைவர் சக்தி பெருமாள் முன்னிலை வகித்தார். மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் நுாலை வெளியிட, எழுத்தாளரும், இந்தியன் பிரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பு நிறுவனர் மோகன்தாஸ் நுாலை பெற்றுக் கொண்டார்.சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில், சங்கத்தின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.