விவசாய விழிப்புணர்வுக்கு பள்ளி தோட்டம்
பெங்களூரு: பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளுக்காக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.*மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோரின் சுகாதார நலன் கருதி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு திட்டம் செய்யப்படுகிறது*சிதிலமடைந்த 19 பள்ளி கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக 67 பள்ளி, கல்லுாரிகளை கட்டப்படும். கழிப்பறை, நிர்வகிப்பு, குடிநீர் மையம் போன்ற பணிகளுக்கு இந்தாண்டில், 35 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்*மாணவர்களிடையே விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி தோட்டம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன் மூலம், ஆசிரியர்கள் அறிவுரை பேரில், பயிர்கள், காய்கறிகள், பூக்கள் விளைவிக்க ஊக்கமளிக்கப்படும். இதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.பொதுமக்களின் குறைகளை தீர்க்க உதவி எண்ணுடன் கால் சென்டர்* பொதுமக்களின் குறைகளை தீர்க்க உதவி எண் கால் சென்டர் அமைக்கப்படும். பதில் திருப்திகரமாக இல்லை என்றால், உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும். தொழில்நுட்பம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண வல்லுனர்களின் ஆலோசனை பெறலாம். தொழில்நுட்பம் பயன்படுத்தி, மாநகராட்சி சேவைகள் வழங்கப்படும்* முடிந்த அளவுக்கு மொபைல் போன் மூலம், மாநகராட்சி தகவல்கள் அனுப்பப்படும். அரசு மற்றும் மாநகராட்சி தகவல்களை ஒரே இடத்தில் இருந்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்* ஒருவர் மாநகராட்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்ற தகவலையும் தெரிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்படும்* மாநகராட்சியில் தற்போது பயன்படுத்தி வரும், 70 மென்பொருட்களையும், தகவல் தொழில்நுட்ப மொபைல் செயலிகளையும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைத்து இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்*மேற்கண்ட அனைத்து திட்டங்களுக்கும், 50 கோடி ரூபாய் வழங்கப்படும்.