அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு
தொண்டி: தொண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் லேப்டாப் இருப்பு குறித்து ஆய்வு செய்யபட்டது. அதில் மூன்று லேப்டாப்கள் திருடுபோயுள்ளது தெரிந்தது. பிப்.28ல் லேப்டாப்கள் திருடு போனதாக தலைமை ஆசிரியர் பழனிக்குமார் புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.