உள்ளூர் செய்திகள்

வாட்ஸாப்பில் பொய் சிக்கினார் பேராசிரியை

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் பீட்டர் ஞானையா, 40, நாசரேத் தனியார் கல்லுாரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார்.அதே கல்லுாரியில், தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியையாக மோனிஷா பணிபுரிகிறார்.சில மாதங்களுக்கு முன், கல்லுாரி நிர்வாகத்திடம் மோனிஷா புகார் அளித்தார். அதில், பிரவீன் பீட்டர் ஞானையா தனக்கு 'வாட்ஸாப்'பில் தொல்லை தரும் தகவல் அனுப்புவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, பிரவீன் பீட்டர் ஞானையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், பிரவீன் பீட்டர் ஞானையா துாத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், பேராசிரியை மோனிஷா போலியான ஆவணங்களை உருவாக்கி உள்ளார் என கூறி இருந்தார்.சைபர் கிரைம் எஸ்.ஐ., சுதாகர் நடத்திய விசாரணையில், பேராசிரியை மோனிஷா, வாட்ஸாப் தகவலை திருத்தி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, பேராசிரியை மோனிஷா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்