போலீசாரிடம் தகராறு மாணவர் கைது
சூளைமேடு: வாகன சோதனையில், போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சட்டக் கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.சூளைமேடு, சவுராஷ்டிரா காலனியில் நேற்று முன்தினம் இரவு, சூளைமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த மூவர், சாலையில் நடத்த வேண்டிய வாகன சோதனையை, ஊருக்குள் அதுவும் குடியிருப்பு பகுதிக்குள் நடத்துவதா எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர். ஆனால், தொடர்ந்தும் அவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் கைது செய்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லுாரி மாணவர் கார்த்தி, 22, தியேட்டர் ஊழியர் நீரஜ், 24, ஸ்ரீகுமார், 23, ஆகியோர் என தெரிந்தது.