உள்ளூர் செய்திகள்

அழகப்பா பல்கலை., தேர்வு முடிவு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., தொலைநிலைக்கல்வி டிச. 2023ல் நடைபெற்ற இளநிலை, முதுநிலை, பட்டயப்பிரிவு மற்றும் சான்றிதழ் பிரிவுக்கான தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.600 இணையவழியாக விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் விடைத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ 500 இணைய வழி செலுத்தி விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெற்று மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நகல் பெற்ற நாளில் இருந்து 7 தினங்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என, அழகப்பா பல்கலை., பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் தேர்வாணையர் ஜோதிபாசு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்