உள்ளூர் செய்திகள்

சிலம்பம் பயிற்சியாளருக்கு விருது

சென்னை: கவர்னர் மாளிகையில் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சியாளர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.கவர்னர் ரவி தலைமை தாங்கி, பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். பின், குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரப்பாளையத்தைச் சேர்ந்த ஆசு சிலம்ப பயிற்சியாளர் ராஜதுரைக்கு, சிலம்ப செம்மல் விருதை கவர்னர் ரவி வழங்கி கவுரவித்தார்.நிகழ்ச்சியில், உலக சிலம்ப விளையாட்டு கழகத் தலைவர் சுதாகரன், சிலம்ப பயிற்சியாளர் சந்திரசேகர், தமிழகம், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்