உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக்கில் இன்டர்ன்ஷிப் ஓராண்டாக உயர்வு

சென்னை : பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, ஆறு மாத இன்டர்ன்ஷிப் பயிற்சியை, ஓராண்டாக உயர்த்த, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.மாநிலம் முழுதும், 500 அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்கள், 2ம் ஆண்டிலும் சேர்க்கப்படுகின்றனர். மொத்தம், 3 ஆண்டுகளுக்கு டிப்ளமா இன்ஜினியரிங் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.டிப்ளமா மாணவர்களின் தொழிற்திறன் பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என, தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். இதன்படி, இந்த மாணவர்களின் படிப்பு முடித்ததும், எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது.இதில் ஏற்கனவே இருந்த, ஆறு மாத இன்டர்ன்ஷிப் பயிற்சியை, நடப்பு கல்வி ஆண்டில் இருந்து, ஓராண்டாக உயர்த்த உள்ளதாக, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக கமிஷனர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்