உள்ளூர் செய்திகள்

தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: சென்னையில் மூடப்பட்ட, இணைக்கப்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறக்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில், சென்னை மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஆசிரியர் சத்தியநாதன் கூறியதாவது:ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி துறை விதிகளின்படி, ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதுடன், சென்னை பள்ளிகளை கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்.மூடப்பட்ட, இணைக்கப்பட்ட சென்னை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறந்து தொடர்ந்து நடத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்