உள்ளூர் செய்திகள்

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

சென்னை: பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 19ம் தேதி நடக்க உள்ளது.இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 1500 பேரைத் தேர்வு செய்து மாதம் ரூ.1500 இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளி கல்வித்துறை வழங்கும். இதில் 50 சதவீத மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலிருந்தும், 50 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இத்தேர்வு நடத்தப்படும். 2024-25ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் விண்ணப்படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.,9ம் தேதி முதல் 19ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் சேர்த்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்/முதல்வர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்.,19ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்