என்.எம்.எம்.எஸ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு ஜன.,24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.2024-25ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் என்.எம்.எம்.எஸ் தேர்வு பிப்.,22ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பக்கட்டணம் ரூ.50 செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.