அனைவருக்கும் தரமான கல்வி அவசியம்!
திறமையான, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஐ.ஐ.டி., போன்ற இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர இயலாமல் போவது குறித்து, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், 'தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், இந்தியாவின் மனிதவள மேம்பாட்டிற்கும் தரமான கல்வி அனைவருக்கும் சாத்தியமாவது அவசியம். அனைத்து நிலைகளிலும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு செலவினங்கள் திட்டமிடப்பட வேண்டும். புதிய பொருளாதாரத்தில் இந்தியா செழிக்க ஆரம்ப பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம்', என்றும் கூறினார்.