உள்ளூர் செய்திகள்

ரேபிடோவின் பிங்க் மொபிலிட்டி பிரச்சாரம்

சென்னை: ரேபிடோ டாக்ஸி நிறுவனத்தின் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிங்க் மொபிலிட்டி என்னும் போக்குவரத்து செயலி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில்,சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டு பேசுகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பெண்களுக்காகவும், முழுக்க முழுக்க பெண் பணியாளர்களை கொண்டும் தொடங்கப்பட்டது. பிங்க் மொபிலிட்டி என்பது பெண்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்தை வழங்கும் ஒரு முயற்சியாகும். பெண்களால் ஓட்டுநர் பணியையும் தைரியமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதனால் பொருளாதார முன்னேற்றத்தையும் பெண்கள் அடைகின்றனர், என கூறினார்.ரேபிடோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குண்டு பள்ளி கூறுகையில், மகளிர்தினத்தை முன்னிட்டு சென்னையில் தொடங்கி ஒரு மாதகாலம் நாடு தழுவிய பிங்க் மொபிலிட்டி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெண்களுக்கு என சுமார் 2 லட்சம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க உள்ளாதாகவும் கூறினார். மேலும் இந்தப் பிரச்சாரம் எம்போஹேர்- நிதி உள்ளடக்கத்தை இயக்குதல் மற்றும் அதிகாரம் அளித்தல் என்ற கருப்பொருளுடன் நடத்தப்படுவாதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்