உள்ளூர் செய்திகள்

ஐந்தாண்டாக முதல்வர் இல்லாத கல்லுாரி

வேடசந்துார்: தண்ணீர்பந்தம் பட்டி அரசு கலைக் கல்லுாரியில் ஐந்து ஆண்டாக முதல்வர் இல்லாத நிலையில் இதை நிரப்ப அரசு முன் வர வேண்டும்.வேடசந்துார் தண்ணீர்பந்தம் பட்டி அரசு கலைக் கல்லுாரியில் 800 க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளாக முதல்வர் இல்லாததால் நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி முதல்வர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். இவரும் இம்மாதம் ஓய்வு பெற உள்ளதால் தண்ணீர் பந்தம் பட்டி அரசு கல்லுாரிக்கு தனி முதல்வர் பணியிடத்தை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் கல்லுாரியில் 25 நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் இருந்தும் கவுரவ விரிவுரையாளர்கள் 18 பேர் மட்டுமே உள்ளனர்.ஜூன் 16 ல் கல்லுாரி திறக்க உள்ள நிலையில் காலி பேராசிரியர் பணியிடங்கள் , முதல்வர் பணியிடத்தை நிரப்ப அரசு முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்