உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை: மத்திய - மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள், மின்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் வரும் ஜனவரியில் நடத்தப்பட உள்ளது.இங்கு, எஸ்.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., - டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சியில் சேர விரும்புவோர், https://forms.gle/QyWHC7dUAk9iYkFt5 என்ற இணைய முகவரியில் உள்ள படிவத்தில், தங்களது விபரங்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும். பயிற்சி கட்டணம் கிடையாது.மேலும் விபரங்களுக்கு, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நேரடியாக அல்லது decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அணுகலாம்.இவ்வாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்