உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு சான்றிதழ் தீயணைப்புத்துறை வழங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு நடுநிலைப் பள்ளிகளில் நடந்த, தீ பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.மாவட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சிறப்பு வகுப்புகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது.அதன்படி, விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் ஆலிச்சிகுடி, சத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு சிறப்பு வகுப்பு நடந்தது.அதில், அவசர காலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவது, தீ விபத்துகளில் மீட்புப் பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.இதில், வெற்றி பெற்ற ஆலிச்சிகுடி மற்றும் சத்தியவாடி பள்ளிகளை சேர்ந்த தலா ஐந்து மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார்.தலைமை ஆசிரியர்கள் கீதா, சக்திவேல் உட்பட ஆசிரியர்கள், தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்