உள்ளூர் செய்திகள்

பெருங்குடியில் புத்தக கண்காட்சி துவக்கம்

சென்னை: ஓ.எம்.ஆர்., பெருங்குடியில், ஏப்ரல் 17 முதல் மே 3ம் தேதி வரை, 17 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.பாரதி புத்தகாலயம் சார்பில், மே 3ம் தேதி வரை, ஓ.எம்.ஆர்., பெருங்குடி பழைய டோல்கேட் அருகில் உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கத்தில், புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி ஸ்ரீதரன் மதுசூதனன், ஏப்ரல் 17ம் தேதி மாலை 06:00 மணிக்கு, புத்தக கண்காட்சியை துவக்கி வைக்கிறார். தினமும் காலை 10:00 முதல் இரவு 09:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.நுாற்றுக்கணக்கான பதிப்பகங்களில் இருந்து, லட்சக்கணக்கான நுால்கள் இடம்பெறும். மாணவ, மாணவியருக்கான ஓவிய போட்டி நடைபெற உள்ளது. இதற்கு, 87789 61607 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்