அரசு ஐ.டி.ஐ.,ல் சேர அழைப்பு
திருப்பூர்: அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,க்களில், மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர், காங்கயம், பல்லடம், உடுமலை, ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஐ.டி.ஐ.,க்களில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 40க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகள் உள்ளன. இவற்றில், 2026 - 27ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஆன்லைனில் பெறப்பட்டுவருகிறது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்; பிளஸ் 2 மற்றும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். 14 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.skilltraining.tn.gov.in என்கிற தளத்தில், ரூ.50 கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும். மதிப்பெண், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்று, ஆதார் ஆகியவை அவசியம். தொழிற்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, முழு பயிற்சி கட்டணமும் இலவசம். 2 செட் இலவச சீருடை, ஷூ, பாட புத்தகம், வரைபட கருவிகள், இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளியில் 6 முதல் பிளஸ்2 வரை படித்தவர்களுக்கு, தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் கூடுதலாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பயிற்சி முடித்த உடன், முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு, 94990 55695; 94990 55700; 94990 55698; 81247 12445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.