குறுவட்ட போட்டியில் மாணவர்கள் ஆர்வம்
தேனி: தேனி குறுவட்ட அளவிலாலன எறிபந்து, பேட்மிட்டன் போட்டியில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., பள்ளியில் மாணவர்களுக்கான எறிபந்து போட்டி நடந்தது. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி அணி, மேரி மாதா பள்ளி அணிகள் முதல் இரு இடங்களை வென்றன. 17, 19 வயது பிரிவில் முத்து தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., பள்ளி, தேனி மேரிமாதா பள்ளி அணிகள் முதல் இரு இடங்களை வென்றன. முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான பேட்மிட்டன் போட்டி நடந்தது. 14வயது பிரிவில் தேனி கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி, மேரிமாதா பள்ளி, 17 வயது பிரிவில் முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் பள்ளி, தேனி கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி, 19 வயது பிரிவில் டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் பள்ளி, தேனி மேரிமாதா பள்ளி அணிகள் முதல் இரு இடங்களை வென்றன.