பள்ளி மாணவியருக்கு தண்ணீர் தட்டுப்பாடு
அன்னூர்: தொப்பம்பட்டியானூரைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் துவக்கப்பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது :தொப்பம்பட்டியானூரில், 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு போர்வெல்லில் மண் சரிவு ஏற்பட்டதால், தண்ணீர் கிடைப்பதில்லை. கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும், துவக்கப்பள்ளி மாணவ, மாணவியரும் தவிக்கிறோம். போர்வெல்லை ஆழப்படுத்தவும், பெரிதுபடுத்தவும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.தற்போதுள்ள போர்வெல்லை ஆறு அங்குலத்தில் இருந்து, எட்டு அங்குலமாக அதிகரித்தால் போர்வெல்லில் நீர் கூடுதலாக கிடைக்கும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.