உள்ளூர் செய்திகள்

கல்லுாரியில் மாநில அறிவியல் கண்காட்சி

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் கிராமப்புற மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடக்கவுள்ளது.'விவேகானந்தா சயின்ஸ் எக்ஸிபிஷன் டு தி ரூரல் மாசஸ்' எனும் தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை அக்., 8, 9ல் காலை 09:30 மணி முதல் மாலை 03:30 மணி வரை மாணவர்கள் பார்வையிடலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் படைப்புகளுடன் பங்கேற்கலாம். சிறந்த மாதிரிகளை உருவாக்கும் பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்.உயர்கல்வி வழிகாட்டுதல், நவீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.நேரடி சோதனைகள், மாதிரிகள் மூலம் மாணவர்களின் அறிவியல் ஆர்வம் துாண்டப்படும். பங்கேற்கும் பள்ளிகளுக்கு கேடயம், அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படும். தொடர்புக்கு: மதுரை: 94873 22127, திண்டுக்கல்: 99767 13199, தேனி: 98432 42304, விருதுநகர் 98426 29245.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்