இளைஞர் எழுச்சி தின விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி தினம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் தேவராஜன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பங்காரம் லட்சுமி கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் அறிவியலும் அப்துல் கலாமும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியைத் தமிழ்த்துறைத் தலைவர் மோட்ச ஆனந்தன் தொகுத்து வழங்கினார். துறை தலைவர்கள் உமா, சித்ரா, வீரலட்சுமி, நுாலகர் அசோக் குமார், உடற்கல்வி இயக்குநர் சரவணன், கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். துறைத் தலைவர் முருகானந்தன் நன்றி கூறினார்.