மாணவ, மாணவியரின் உயர்கல்விக்கு ஆலோசனை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், படிப்பில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஏழை, எளிய மாணவ மாணவியரின், உயர்கல்விக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, யாதவ பண்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவர் ஆதிகேசவன் தலைமை தாங்கினார். அமைப்பின் தலைவர் பார்த்திபன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி கனவுடன் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நீட் தேர்வு மட்டுமின்றி டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் மருத்துவர் லாவண்யா, ஓய்வு பெற்ற சப் - கலெக்டர் தங்க நடராஜன் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவியர் பங்கேற்றனர்.