ஜம்மு பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்
ஜம்மு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமிதாப் மாத்தூ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், இதற்கான நியமனத்தை வழங்கியதாக மத்திய மனிதவள மேம்பாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்முவின் சில பகுதிகளில் மாத்தூ நியமனத்திற்கு எதிர்ப்பு இருந்ததால், அவரின் நியமனம் கடந்த 6 மாதங்களாக பரிசீலனையிலேயே இருந்தது. தற்போது அவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இந்த பதவிக்கு, இவருடன் சேர்த்து எஸ்.கே. சொபோரி(விஞ்ஞானி) உள்ளிட்ட 3 நபர்களும் போட்டியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.