இக்னோவில் முழுநேர எம்.பி.ஏ. படிப்பு
இரண்டு வருடங்கள் கொண்ட முழு நேர எம்.பி.ஏ. படிப்பை கார்பொரேட் கவர்னன்ஸ் என்ற பிரிவில் இக்னோ தொடங்கியுள்ளது. இந்த படிப்பில் புகழ்பெற்ற மேலாண்மை மற்றும் தொழில் நிறுவன வல்லுனர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுவார்கள். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து 50௦% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவிலிருந்து 45% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை முடித்த பிறகே தேர்வு செய்யப்படுவார்கள். ஜூலை மாதத்திலிருந்து வகுப்புகள் தொடங்கும். இக்னோ வழங்கும் இந்த எம்.பி.ஏ. பட்டம் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்றது. இந்த எம்.பி.ஏ. படிப்பானது இக்னோவின் கார்பொரேட் படிப்பு, பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தின் கீழ் நடத்தப்படுகிறது.