அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 19 தனியார் நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 19 தனியார் நர்சரி பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பலியான விபத்தில் சமீபத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து, இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் நர்சரி மற்றும் துவக்கப் பள்ளிகளின் அங்கீகாரம், அடிப்படை வசதிகள், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பனையூர் அங்கம்மாள் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, நரிக்குடி ஸ்ரீபத்திரகாளியம்மன் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, குண்டன்குளம் குட்ஷெப்பர்டு மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, செவல்பட்டி கலைவாணி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, தாயில்பட்டி சுகந்தம் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, சூலக்கரை ஸ்ரீவத்சா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, ஆத்துமேடு மாரியம்மன் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி,நேசன் காலனி காளியப்பநாடார் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, லிங்காபுரம் காலனி கே.வி.டி.எஸ்., மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, விளாம்பட்டி ஆடலரசு கே.ஆறுமுகச்சாமி நாடார் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, சேத்தூர் ரெயின்போ மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, ராஜபாளையம் பர்ஸ்ட் ஸ்டெப் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, ராஜபாளையம் லயன்ஸ் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, ராஜபாளையம் ஏ.ஏ.வி., லேண்ட் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, மீனாட்சிபுரம் கிரேஸ் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, சின்னவள்ளிகுளம் பெருந்தலைவர் காமராஜர் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, சொக்கலிங்கபுரம் கிரீன் ஆப்பிள் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, மல்லாங்கிணர் பொன்பழனி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, சாத்தூர் எஸ்.எச்.என்.,எட்வர்டு மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்கியது கண்டறியப்பட்டது. உரிய விளக்கம்கேட்டு, அப்பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்ககல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழக அரசு உத்தரவின் அடிப்படையிலே பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து, கலெக்டர் தலைமையிலான குழு முடிவு செய்யும்" என்றார்.