சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 216 இடங்கள்
மொத்தம் உள்ள 913 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு வரை 624 இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். மீதமுள்ள 289 இடங்களில் நேற்றைய தினம் 73 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். அரசு பல் மருத்துவக் கல்லூரியில் திங்கட்கிழமையன்று 5 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். தற்போது மீதமுள்ள 23 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் 113 மாணவர்கள் சேர்க்கை கடிதம் பெற்றனர். தற்போது 799 இடங்கள் காலியாக உள்ளன. ஆகஸ்ட் 4ம் தேதி வரை இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் ஏற்படும் காலியிடங்களும், மீதமிருக்கும் காலியிடங்களும், ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் நடைபெறும் மூன்றாம் கட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்.