உள்ளூர் செய்திகள்

பத்திரிகை வினியோகஸ்தர் தினம் 3ல் எலஹங்காவில் கொண்டாட்டம்

எலஹங்கா: பெங்களூரு எலஹங்கா பத்திரிகை வினியோகஸ்தர் சங்கம் சார்பில், வரும் 3ம் தேதி, பத்திரிகை வினியோகஸ்தர் தினம் எலஹங்காவின் என்.இ.எஸ்., அலுவலகம் அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்படுகிறது.சங்க தலைவர் சதீஷ் தலைமை வகிக்கிறார். தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., விஸ்வநாத், அகில இந்திய வீரசைவ மஹாசபா எலஹங்கா தொகுதி தலைவர் ஹேமலதா சிதானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மூத்த பத்திரிகை வினியோகஸ்தர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.எஸ்.எஸ்.எல்.சி., 2ம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பத்திரிகை வினியோகஸ்தர் பிள்ளைகளுக்கு பிரதிபா புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. எலஹங்கா புறநகர், எலஹங்கா ஓல்டு டவுன், மாருதிநகர், பாகலுார் கிராஸ், சிங்கநாயகனஹள்ளி, ராஜனகுண்டே ஆகிய பகுதிகளின் பத்திரிகை வினியோகஸ்தர்கள், நிர்வாகிகள், நாளிதழ்கள் சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்