உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி.,க்கு முன்னாள் மாணவர் ரூ.5 கோடி நிதி

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவரும், தீம் ஒர்க் அனலிடிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பரசுராம் பாலசுப்பிரமணியம், 5 கோடி ரூபாயை, நீர் மேலாண்மை துறையின், அக்வா மேப் ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கினார்.சென்னை ஐ.ஐ.டி., வளர்ச்சிக்கு, முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, அக்வா மேப் என்ற நீர் மேலாண்மை ஆராய்ச்சி மையத்துக்கு, முன்னாள் மாணவர் பரசுராம் பாலசுப்பிரமணியம் 5 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.அப்போது, முன்னாள் மாணவர்கள் மற்றும் நிறுவன உறவுகள் டீன் அஸ்வின் மகாலிங்கம், அக்வா மேப் ஒருங்கிணைப்பாளர் லிகி பிலிப், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசக இயக்குநர் சப்னா போடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்