ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
புதுடில்லி: ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும் அதிசய நிகழ்வு, வரும் ஜூன் 3ம் தேதி நிகழ்கிறது.புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.வரும் ஜூன் 3ல், கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி என்ற வரிசையில், ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை, பூமியில் இருந்து பார்க்கலாம்.இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால், பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம்.ஐந்துக்கு மேற்பட்ட கோள் தெரியும் அரிதான நாள்:* 2024 ஜூன் 3, ஆக.,28* 2025 ஜன.,18, பிப்.,28, ஆக.,29ஏழு எப்போது:இதில் பிப்.,28 ல், ஏழு கோள்களையும் பூமியில் இருந்து பார்க்கலாம்.