உள்ளூர் செய்திகள்

போலீஸ் எழுத்து தேர்வு 83 சதவீதம் பேர் பங்கேற்பு

சென்னை: காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறையில், 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நேற்று நடந்த எழுத்து தேர்வில், விண்ணப்பித்தோரில், 83 சதவீதம் பேர் பங்கேற்றனர்.தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில், 3,359 இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 8ல், அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு, 41 திருநங்கையர் உட்பட, இரண்டு லட்சத்து 81,497 பேர் விண்ணப்பித்தனர்.அவர்களுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுதும், 35 மாவட்ட மற்றும் மாநகர மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில், அண்ணா பல்கலை, பச்சையப்பன் கல்லுாரி என, 10 மையங்களில் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில், விண்ணப்பதாரர்களில், 83 சத வீதம் பேர் பங்கேற்றனர்.சென்னையில், 9,194 பேர் தேர்வு எழுதினர்; 3,109 பேர் பங்கேற்கவில்லை என, சீருடை பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்