மாணவர்களுக்கான தனி பேருந்துகள்
புதிதாக 16 வழித்தடங்களில் மாணவர்களுக்கான தனி பேருந்துகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல், மாணவர்களுக்கான தனிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது ஏராளமான மாணவர்கள் செல்லும் வழித் தடங்களிலும், பள்ளிகள் அதிகம் நிறைந்த வழித்தடங்களிலும் இந்த தனிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று 12 வழித்தடங்களில் 48 சிறப்பு பயண நடைகளுடன் தற்போது தனி பேருந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில், மேலும் சில வழித்தடங்களில் இதுபோன்ற தனிப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை எற்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கூடுதல் வழித்தடங்களில் தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார். அதன்படி, பிராட்வே-கன்னகிநகர், தி.நகர்-கிழக்கு தாம்பரம், தி.நகர்-வி.இல்லம், ஆவடி-பிராட்வே, பெரம்பூர்-அண்ணா சதுக்கம், மணலி-பிராட்வே உள்ளிட்ட 16 வழித்தடங்களில் 32 சிறப்பு பயண நடைகளுடன் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த தனிப் பேருந்துகளில் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.