உள்ளூர் செய்திகள்

நெட் பாஸ் அதிகரிப்பு

கல்லூரி பேராசியர் தகுதித்தேர்வான "நெட்' தேர்வு ஆண்டு தோறும் (2முறை) யு.சி.ஜி., ஆல் நடத்தப்படுகிறது. இந்தாண்டு "நெட்' தேர்வில் 80 சதவீதம் பேர் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளனர். 2010ல் 3.81 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், இந்தாண்டு 5.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஆசிரியர் பணிக்கு உள்ள வரவேற்பை காட்டுகிறது என யு.சி.ஜி., தலைவர் வெட் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு நடைபெற்ற நெட் தேர்வில் 7,233 பேர் வெற்றி பெற்றனர். ஆனால் இந்தாண்டு ஜூன் மாதத்தில் நடந்த நெட் தேர்வில் 12,927 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கூடுதலாக 80 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஒ.பி.சி., பிரிவினர் தங்களது இடஒதுக்கீடு 27 சதவீதத்துக்கு, 33.06 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல ஆதி திராவிட/பழங்குடியினர் 33.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. மேலும் ஆறாவது ஊதியக்குழு காரணமாக ஆசிரியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால் நெட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்