உள்ளூர் செய்திகள்

புத்தகங்களை முந்தின கைடுகள்

சமச்சீர் கல்வி திட்டம் உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, தற்போது சமச்சீர் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்புத்தகங்களில் உள்ள சில பகுதிகளை நீக்க, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சமச்சீர் கல்வித்திட்ட பாடங்களுக்கான கைடுகள், உடனடியாக விற்பனைக்கு வந்துவிட்டன. வெற்றி, கோனார், பிரீமியர், கங்கா, சுரா, சூர்யா, ஐ.டி.எல், டைமண்ட் உள்ளிட்ட பதிப்பகங்களில் இருந்து, கைடுகள், அழகிய அட்டை படங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு அனைத்து பாடங்களுக்கும் கைடுகள் வந்து விட்டன. ஏழு, எட்டு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு, ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மட்டும் கைடுகள் வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்