உள்ளூர் செய்திகள்

பிரிட்டனில் படிக்க விருப்பமா?

சென்னை: பிரிட்டனில் உயர்கல்வி பயில விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், பிப்ரவரி 3ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரை, பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் "EDUCATION UK EXHIBITION" என்ற நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கப்படுகிறீர்கள். இதன்மூலம், 55க்கும் மேற்பட்ட பிரிட்டன் பல்கலைகளிலிருந்து வரும் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி, சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். இதற்கான நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. விரிவான விபரங்களுக்கு www.educationuk-in.org என்ற வலைத்தளம் செல்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்