உள்ளூர் செய்திகள்

பருவத்தேர்வு முடிவு வெளியீடு

கோவை: எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை பருவத்தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், 14 இளங்கலை மற்றும், 7 முதுகலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்புகளுக்கான பருவத் தேர்வு கடந்த நவ., டிச., மாதங்களில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று மாலை, 6:00 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை, www.drsnsrcas.ac.in என்ற இணையதள முகவரியிலும், கல்லுாரி வளாக அறிவிப்பு பலகையிலும் தெரிந்துகொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம்தெரிவித்துள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்