உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை?

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், கடந்தாண்டு மார்ச் 10 முதல் பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஓராண்டாக நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை; மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன.நாள்தோறும் அதிகரிப்புஇந்நிலையில், கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததால், இந்தாண்டு ஜன.,19 முதல், மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடியாக வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால், பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மாணவ - மாணவியர் கடைப்பிடிக்க தவறியதால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. மாநிலம் முழுதும் பல இடங்களில், பள்ளிகளில் கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.அது மட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள் தவிர, மக்கள் கூடும் மற்ற இடங்களிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுதும், நேற்று ஒரே நாளில், 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.சட்டசபை தேர்தல் வரும், 6ம் தேதி நடக்க உள்ளதால், மாநிலம் முழுதும், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால், கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் அலறுகின்றனர்.இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை தவிர்க்கும் வகையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.இதன்படி, ஒன்பது முதல், பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு, மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் வகுப்புஇன்று முதல் மறு உத்தரவு வரும் வரை, ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்துமாறு, தமிழக தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் அறிவித்து உள்ளார்.பொது தேர்வுகள், மே 3 முதல் நடத்தப் படுவதால், பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்லுாரிகளுக்கும் விடுமுறையை அறிவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா தொற்று மட்டுமின்றி, கல்லுாரிகளில் தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட உள்ளன. இந்த பணிகளையும் தேர்தல் துறை மேற்கொள்ள உள்ளது. எனவே, கல்லுாரிகளில் வழக்கமான வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.அறிவிப்புஇதையொட்டி, கல்லுாரிகளுக்கு தினமும் வரும் மாணவர்களின் சதவீதம்; கொரோனா தொற்று பாதித்த மாணவர்கள், பேராசிரியர்களின் எண்ணிக்கை; முடிக்க வேண்டிய பாடங்களின் அளவு, ஓட்டுச்சாவடி அமைக்க உள்ள கல்லுாரிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை, உயர் கல்வி துறை சேகரித்துள்ளது. இதையடுத்து, வரும், 29ம் தேதி முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு விடுமுறை அளிக்க, ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்