உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு தொழில் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு, இலவசமாக கம்ப்யூட்டர், அலங்கார ஆடை வடிவமைத்தல், மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம், செவிலியர், ஜே.சி.பி., கிரேன் இயக்குதல், கேட்டரிங் மற்றும் ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.   இப்பயிற்சியில் 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். பயிற்சிக் கட்டணம் இலவசம். பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனமே வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் வகையில், தொழில் நிறுவனங்களை கண்டறிந்து தகுதியான வேலை வாய்ப்பினை தர உறுதி அளித்துள்ளது.   இப்பயிற்சியில் சேர, குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பப் படிவங்களை திட்ட அலுவலர், மகளிர் திட்ட அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.   மேலும் தகவல்களுக்கு 27236348, 27239848 டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் மகளிர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று வாழக்கையில் முன்னேற வேண்டும் என, கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்