மறுமதிப்பீடு விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை: கோவை அரசு கலை கல்லுாரியில் 2020-23ம் ஆண்டில் இளங்கலை, அறிவியல் மாணவர்கள் ஆறாம் பருவத்திலும், 2021-23ல் படித்த முதுநிலை மாணவர்கள் நான்காம் பருவத்திலும் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற தவறியிருந்தால், உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர், இளநிலை - 600 ரூபாய், முதுநிலை - 900 ரூபாய் கட்டணம் யூகோ வங்கியில் செலுத்தி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில், 12ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கல்லுாரி முதல்வர் உலகி தெரிவித்துள்ளார். கடந்த, மே மாதம் நடந்த பருவத்தேர்வு முடிவு ஜூன் 28ல் வெளியிடப்பட்டது. மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர், இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இளநிலை பிரிவில் விடைத்தாள் ஒன்றுக்கு 400 ரூபாய், முதுநிலையில் 600 ரூபாய், எம்.சி.ஏ., பிரிவில் 750 ரூபாய், விண்ணப்ப பதிவு கட்டணம் 75 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகலாம்.