உள்ளூர் செய்திகள்

நீட் தரவரிசை பட்டியல்

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து யு.ஜி., நீட் தேர்வு எழுதிய 5,714 மாணவர்களில், 3,140 பேர் இந்தாண்டு தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 54.9. இது, சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதமான 52.79ஐ விட 2.11 சதவீதம் அதிகம். இதையடுத்து கடந்த ஜூலை 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம், பி.ஏ.எம்.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு விண்ணப்பம் ஆன்லைனில் வரவேற்கப்பட்டது.தொடர்ந்து, 9ம் தேதி வரைவு தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டன. அனைத்து பரிசீலனைகள் முடிந்து திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனை இருந்தால் இன்று 18ம் தேதி 11:00 மணிக்குள் தங்களுடைய லாகின் மூலம் தெரிவிக்கலாம். அரசு ஒதுக்கீட்டில் - 1,458, நிர்வாக ஒதுக்கீட்டில் - 3,807, கிறிஸ்துவ பிரிவு ஒதுக்கீட்டில் - 17, தெலுங்கு சிறுபான்மை பிரிவினருக்கு - 15, விளையாட்டு வீரர் - 61, என்.ஆர்.ஐ., - 167 பேர் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்