ஆசிரியர் கையேடு வெளியீடு
மதுரை: மதுரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கையேட்டை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தலைமைப்பண்பு பயிற்சி இரண்டு ஆண்டுகளாக நடந்தது. பங்கேற்றவர்களின் அனுபவங்களை ஆசிரியர்கள் பயன்படும் வகையில் 40க்கும் மேற்பட்ட தலைப்புகளில், 291 பக்கம் கொண்ட கையேடாக தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டை அமைச்சர் மகேஷ் வெளியிட இயக்குநர் அறிவொளி பெற்றார். இணை இயக்குநர்கள் ஜெயகுமார், தனியார் பள்ளிகள் ஆய்வாளர் சிவானந்தன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்புராஜ் பங்கேற்றனர்.