உள்ளூர் செய்திகள்

பிரபல மருத்துவருக்கு விருது

புதுடில்லி: பிரபல மருத்துவர் வி.மோகனுக்கு லஷ்மிபத் சிங்கானியா -ஐ.ஐ.எம்., லக்னோ தேசிய தலைமை விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.அறிவியல் மற்றும் தொழில்நுடபத்துறையில் சிறப்பான சேவை புரிந்தமைக்காக 2022-23ம் ஆண்டிற்கான லஷ்மிபத் சிங்கானியா -ஐ.ஐ.எம்., லக்னோ தேசிய தலைமை விருதிற்கு மூத்த மருத்துவர் வி.மோகன் தேர்வு பெற்றார்.இதையடுத்து டில்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று டாக்டர் வி.மோகனுக்கு விருதை வழங்கி கவுரவித்தார்.இந்த விருது கடந்த 2018ம் ஆண்டிற்கு பின்னர் தற்போது தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்