சி.பி.எஸ்.இ.,யில் மும்மொழி கொள்கை?
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தற்போது இரு மொழி கொள்கை அமலில் உள்ளது. புதிய கல்வி கொள்கையின்படி, இதை மும்மொழி கொள்கையாக மாற்ற, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இந்த மாற்றம் நடைமுறைப்படுத்த வாய்ப்புஉள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேபோல், கணிதம் மற்றும் கணக்கீட்டு சிந்தனை, சமூக அறிவியல், அறிவியல், கலை கல்வி, உடற்கல்வி, தொழிற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகிய, 7 பாடங்களை, 10ம் வகுப்புக்கு அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.