மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி
புதுச்சேரி: தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பொது அறிவு தேர்வில், அரசு பள்ளி மாணவர் வெற்றி பெற்று லேப்டாப் பரிசு பெற்றார்.தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், பொது அறிவு தொடர்பாக நடந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த புதுச்சேரி வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தீரர் சத்யமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தர்மாவிற்கு, லேப்டாப் வழங்கப்பட்டது.இதுதவிர, புதுச்சேரியை சேர்ந்த சுபிக் ஷன், ஹரிணி, மஞ்சுளா, விக்கிரவாண்டி சுந்தரன், சிதம்பரம் விஷ்ணுவிற்கு, ஸ்மார்ட் வாட்ச் பரிசு வழங்கப்பட்டது.மாணவர் தர்மா கூறிதாவது: கடந்த ஆண்டு நான் பிளஸ் 1 படித்தபோது நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்மார்ட் வாட்ச் பரிசு பெற்றேன். இந்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, முதல் பரிசாக லேப்டாப் கிடைத்தது மகிழ்ச்சி. மாணவர்களுக்கும் பயனுள்ள நிகழ்ச்சி. நமக்கு தெரியாத பல விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது. உயர்கல்வி பயில சிறந்த வழிகாட்டியாக இருந்தது என கூறினார்.