இன்று ஐ.ஏ.எஸ்., பயிற்சி
காஞ்சிபுரம்: சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நாளை மறுதினம், இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்க இருப்பதாக காஞ்சி சங்கர மடம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் தெரிவித்திருப்பதாவது:காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் சென்னையில் உள்ள பி.எஸ். கல்வி நிறுவனம் வாயிலாக, இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் வரும் 26ல் துவக்கப்பட உள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளில் மாணவர்களை உருவாக்கிடவும் புண்ணிய ஆத்மா, புண்ணிய அதிகாரி, புண்ணிய தலைவர் என்ற உயர்ந்த குறிக்கோள்களுடன் செயல்படுத்திட திட்டமிட்டுள்ளோம்.இதற்கென தனியாக காஞ்சி மகா சுவாமி அகாடமி சிவில் சர்வீசஸ் என்ற பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபவமும், திறமையும் உள்ள பல பேராசிரியர்கள் இலவச பயிற்சியை அளிக்க உள்ளனர். விருப்பம் உள்ள மாணவ - மாணவியர் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு 98400 50586 அல்லது 98408 33575 என்ற மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.