உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் முன்னேற்பாடு

நாமகிரிப்பேட்டை : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக திறப்பதற்கு வசதியாக பள்ளி வளாகம், வகுப்பறையை சுத்தம் செய்து வைக்க வேண்டும். மின் இணைப்புகளை சரி பார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அடுத்த ஞாயிற்றுக்கிழமை கடைசி வாரம் மற்றும் ஓட்டு எண்ணிக்கை இருப்பதால், நேற்றே பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கு மேல் வகுப்பறைகள் திறக்காமல் இருந்ததால், குப்பை, துாசு, ஒட்டடை ஆகியவை அதிகம் இருந்தன. நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள், நேற்று திறக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டன. வார கடைசிக்குள் சுத்தம் செய்து பள்ளிகளை தயார் செய்து விடுவோம் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்