உள்ளூர் செய்திகள்

வேளாண்காடு வளர்ப்புத் திட்டம்

கோவை: வேளாண்காடு வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சித் திட்டம் கோவை ரெட்வுட்ஸ் இயற்கை வேளாண் பண்ணையில் நடக்கிறது.காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்புத் திட்டம் (டிஓஎப்ஐ), அமெரிக்க பன்னாட்டு வளர்ச்சி முகமை (யுஎஸ்ஏஐடி) மற்றும் இந்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தும் 5 ஆண்டு திட்டமாகும். இப்பயிற்சியில் வேளாண்காடுகள், மரங்களின் வகைகள் ஆகியத் தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆக.,25ம் தேதி நடைபெறும் இப்பயிற்சி பற்றி மேலும் தெரிந்துகொள்ள 8075783478 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் பங்குபெற https://docs.google.com/forms/d/e/1FAIpQLSduGh37KQxATxez-hJWu2kesFh0yTckvT4cXBgbWmpS5xga-w/viewform?usp=sf_link -ல் பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்