உயர்கல்வி வழிகாட்டுதல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் முஸ்லிம் சுன்னத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள் முகமது இஸ்மாயில், முகமது அனஸ் ஆகியோர் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பு குறித்தும், தொழில் நுட்ப படிப்புகள் குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சியில் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா, அரபிக் கல்லுாரி பொறுப்பாளர் தாஜுதீன் உட்பட முஸ்லிம் ஜமாத்தார்களும், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.