நர்சிங் மாணவர்கள் உறுதிமொழியேற்பு
கோவை: ராயல் கேர் நர்சிங் கல்லுாரியில் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் வகையில் விளக்கேற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ராமலட்சுமி மஹாலில் நடந்தது. ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜெயினி கெம்ப் பேசுகையில், “நோயாளிகளின் உடல்நல முன்னேற்றத்தில் செவலியர்களின் அர்ப்பணிப்பும், சேவையும் முக்கியமானது. செவிலியர்களுக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் உள்ளன,” என்றார்.பி.எஸ்.சி., நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., முதலாமாண்டு மாணவர்கள் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றனர். ராயல் கேர் நர்சிங் கல்லுாரியின் முதல்வர் டாக்டர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.