உள்ளூர் செய்திகள்

இளைஞர்களுக்கு வழிகாட்டும் நுால்கள்

கோவை: ரூட்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குனர் கவிஞர் கவிதாசன் எழுதிய நான்கு நுால்கள் வெளியீட்டு விழா, காந்திபுரம் ஆர்.வி.ஓட்டலில் நேற்று நடந்தது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், “கவிஞர் கவிதாசன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர். அவரது புதிய நுால்கள் இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், வெற்றியை தேடி தரும் நல்ல நுால்களாகும்,” என்றார்.பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முருகேசன், பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சிவகுமார், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் தமிழாசிரியர் கருணாநிதி உள்ளிட்டோர் நுால்கள் குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்